காலநிலை மாற்றம்- மக்கள் இயக்கம் ஆக...!
Climate changes to extreme levels in nearby futures :-
இதற்கான மக்கள் மனநிலையை ஒரு இயக்கமாக ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்.
* தினமும், அல்லது வாரத்தில் ஒரு நாளாவது காலை, மாலை சந்தியா நேரங்களில் ஒரு 15 நிமிடம் கால நிலை மாற்றம் குறித்த நம் கேள்விகளை, அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை வாசகமாக எழுதிய பதாகைகள் கையிலேந்தி வீட்டின் வாசலில் குடும்பம் அமைதியாக நிற்க / உட்கார வேண்டும்.
* அக்கம் பக்கம் வீட்டாருடன் இது குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
* மாதம் ஒரு முறை அந்தந்த பகுதிகளில் அரசியல் பிரமுகர்கள் கொண்டு கூட்டம் நடத்தி விவாதிக்கலாம்.
* இந்த அமைதியான தொடக்கம், மக்களின் ஒத்த எண்ணங்களின் குவியல், மாற்றங்களை கொண்டு வரும்.
* அரசியல் வாதிகளை ஈடுபடுத்துவது, அவர்களை பேச வைப்பது, இது குறித்த சிந்தனை அவர்கள் மனதில் வளர காரணமாகும். அவர்களின் குடும்பத்தாரும் இதுகுறித்து வீட்டில் அவருடன் விவாதிக்க, விஷயம் வீரியம் பெறும்.
* பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி, Quiz Contest, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுகள் தரலாம். இதன் கருத்து தொகுப்புகளை அரசுக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கைகளை பரிந்துரைக்கலாம்.
* ஒவ்வொரு வீட்டின் சுவரில் தகவல் பலகை நிறுவி நமக்கு தெரிந்த இதுகுறித்த செய்திகள் ஒன்றை யாவது எழுதி வைக்க, தகவல் பகிர்வு நடக்கும்.
Comments
Post a Comment