வெளிநாட்டு வாழ்க்கை - வயதான பெற்றோர்- எது நம் கடமை ?
வெளிநாட்டு வாழ்க்கைக்கு பல வருடங்கள் பழகிய பின், வயதான பெற்றோரை பார்த்துக்கொள்ள, பெற்றோர் தங்களை திரும்ப வரும்படி கேட்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் கடைசி காலத்தில் அவர்களுடன் இருந்து, அவர்களை பார்த்துக் கொள்வது தம் கடமை என்று உணர்ந்து, பெற்றோருக்கு அந்த திருப்தியை தரவும், தாமாக முடிவெடுத்து இந்தியா திரும்பி வந்த ஒரு 'திருமகனின்' சுய விளம்பல் இந்த லிங்கில் விகடன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
லிங்கை அழுத்தி, படிக்கவும். அல்லது லிங்கை copy பண்ணி, Google search ல் தேடி படிக்கவும்.
ஒருவரின் வாழ்க்கை பிறருக்கு 'பாடம் ' .
முடிவெடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு, முடிவெடுக்க இந்தப் பதிவு ஒரு 'ஊன்றுகோல்'.
https://www.vikatan.com/lifestyle/culture/businessman-aniruddha-anjana-returns-to-india-from-america-why
இதைப் படித்தப் பின்னர் இன்னும் ஒருவராவது வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி வந்தால் அதுவே இந்தப் பதிவின் வெற்றி...!
"எவரும் வாழலாம், எப்படியும் வாழலாம், பெற்று, வளர்த்து, படிக்கவைத்து, இன்று இந்த நிலைக்கு வாழ்வில் உயர காரணமாக இருந்த பெற்றோருக்கு எதை திருப்பித் தர முடியும்? பணமா ? பாசமா ? உடையா, நகையா, பேரன் பேத்திகள் அருகாமையா ? அவர்களின் வயோதிக நாட்களில் தள்ளாமையில், தனிமையில் வாடுபவருக்கு ஒரு வாய் சோறு ஊட்டிவிடுதலா, 'சாப்பிடுறீங்களா' என்று ஒரு விசாரித்தலா, அவர்களின் ஒவ்வொரு நகர்வுக்கும் ஊன்றுகோலாய் இருத்தலா...? யோசித்து பார்த்தால், பெற்றோருக்கு அருகில் இருந்து செய்ய பணிகள் ஆயிரம்... நம்பிக்கை தர வழி ஒன்றே ஒன்று, அவர்களுடன் கடைசி நாட்கள் வரை வசிப்பது, மட்டுமே. !!!
*செள.ராசா*
Comments
Post a Comment