பாதுகாப்பு... மூடி !
நம் தொண்டைப் பகுதியில் இரண்டு பாதைகளைக் பிரிகிறது. ஒன்று சுவாசக் குழாய் பாதை மற்றது உணவுக்குழாய் பாதை. பிரியும் இடத்தில் ஒரு மூடி பொருத்தப்பட்டுள்ளது. அந்த மூடி ஒரு பக்கமாக அசையும் போது மூச்சு குழாய் மூடும். மற்ற பக்கம் அசையும் போது உணவுக் குழாயை மூடும். அந்த மூடியால் ஏதேனும் ஒரு பாதையை மட்டுமே திடமாக மூட முடியும்.
இந்த அமைப்பில் Default ஆக எப்போதும் மூடிய நிலையில் இருப்பது மூச்சுக்குழாய் மட்டுமே! இது பாதுகாப்பு கருதி இறைவனால் வடிவமைக்கப்பட்டுள்ள அமைப்பு.
உணவுக்குழாய் எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்பது படைப்பின் நோக்கம் அல்ல!
எப்போதும் திறந்தே இருக்கும் உணவுக்குழாய் எப்போதும் உணவை உள் கடத்தவே என்று மனிதன் நினைத்தால் அது அவன் தவறு. திறந்தே இருந்தாலும் வயிறு பசித்த போது மட்டும் அளவாக மட்டும் உணவை உட்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு *மனிதன்* பயிற்சி கொள்ளவேண்டும்!
மற்ற உயிரினங்களுக்கு அந்த கட்டுப்பாடு Intuition ஆக உணர்வுபூர்வமாக உள்ளது!
Comments
Post a Comment