எளிய உணவு... வாழும் வழி..!
எளிய உணவு - வாழும் வழி !
_____
ஒரு டம்ளர் அரிசியை கழுவி அடுப்பில் ஏற்றினால் சோறு. ..
அதில் தண்ணீர் சேர்த்து பானையில் இட்டு வைத்தால் நாள் முழுதும் உணவு.
சோறும், நீரும் சிறிது பாத்திரத்தில் இட்டு, தயிர் சேர்த்து உடன் சட்னி, அல்லது ஊறுகாய் எதாவது சேர்த்து பிசைந்து சாப்பிட தொட்டுக்கொள்ள தனியே ஏதும் தேவையில்லை. தேவை எனில், வெங்காயம் சேர்த்து சாப்பிட ருசியோ கொள்ளை. பசியோ போன இடம் தெரியவில்லை. எளிய சத்தான உணவு. இதை தயாரிக்க நேரம் 5 முதல் 30 நிமிடம் எவ்வளவு என்பது அவரவர் கையில்.
வசதிகள் இருக்கும் போதே இதை பழகினால் எதுவும் இல்லாத சூழலில் வாழ்க்கை வாழ மிக எளிதாகும்.
வாழ நினைத்தால் வாழலாம். .
வழியா இல்லை பூமியில்
Comments
Post a Comment