விண்ணையும் தொடுவேன் !

 தினமலர் வாரமலர் 11, மே, 2025 இதழ், 

விண்ணையும் தொடுவேன் ! இந்துமதி யின் தொடர்கதை 10 ம் அத்தியாயம்.

https://www.dinamalar.com/malarkal/vara-malar-weekly-magazine/varamalar-story-vinnaiyum-thoduven/70591

இந்த கதையை இன்று மே,20, அன்று படிக்கக் கிடைக்கப் பெற்றேன். 

இதில், 'நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்த நண்பர்கள் பிரபாகரும், புகழேந்தியும் அவர்கள் உரையாடிய பல விஷயங்களில், ஒன்று, இந்தியப் சமுதாயத்தில் இன்று புரையோடி கிடக்கும், தினசரி செய்தத்தாள்களிலும், மீடியாக்களிலும் இந்த குற்றச்செயல்கள் பற்றி இடம்பெறாத நாளே இல்லை என்கிற அளவிற்கு ஆங்காங்கே நடைபெறுகிற "பாலியல் வன்முறை, துன்புறுத்தல், கூட்டு பலாத்காரம் ..." பற்றியதானது. 

குறிப்பாக, இது குறித்தான, ஒரு வெளிநாட்டு பத்திரிகை எழுதிய ஆராய்ச்சி கட்டுரையில், இடம்பெற்ற குறிப்பு ..... " இந்திய இளைஞர்களை பற்றிய குறிப்பு .... ஆம், வெளிநாட்டு இளைஞர்கள், அநேகமாக வன்புணர்வு, செய்வதில்லை. கூட்டு பாலியலில் ஈடுபடுவதில்லை. பெண்களை மானபங்கப் படுத்துவதில்லை..." என்ற உண்மை. இந்த 'கலாச்சார அதிர்வான' உண்மை அறிந்து மிக அதிர்ந்தேன். 

இதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது அந்தக் கட்டுரையில். மேலை நாட்டு கலாச்சார சீரழிவு என்று நாம் கருதும் பழக்கங்கள், நடைமுறையில் குற்றச்செயல்கள் தவிர்க்கப்பட ' காரணி' களாக இருப்பது நல்ல கண்ணோட்டமாகப் பட்டது. 

மேலும் ஒரு எண்ண ஓட்டம் ... மது விற்பனை யை அரசே நடத்துவது போல், 'சிவப்பு விளக்கு தொழிலை' யும் அரசே நடத்தினால், பாலியல்  உணர்வு உந்துனர்களுக்கு வடிகால் கிடைத்து, குற்றச்செயல்கள் குறைய, முழுவதும் தடுக்கப்பட காரணியாகலாம்.


Comments