திடீர் அறிவிப்புகள் - பூகம்பங்கள்...???

 இந்தியாவில் பூகம்பம் கடந்த சில வருடங்களாகவே ;

அளவில்... 

முழுவதுமாக அழித்து

விட வில்லை... ஆனால் அமைதியாக மக்கள் வாழ ஏதுவாகவும் இல்லை. மக்கள் வீட்டினுள் இருந்ததை விடவும் வீதியில் நின்ற நேரம் அதிகம் ! 

எந்நேரமும் அளவு விஞ்சி விடும் என்ற நிலையில்... அதை நிறுத்த மாறுதலை, மக்களுக்கு ஆறுதலை கொண்டு வர எதிர்வினை புரியும் அரசியல் விஞ்ஞானிகள், தென்னகத்தே, குறிப்பாக தமிழகத்தே அநேகர் உண்டு... அதில் முதலாமவர் நம் முதல்வரே. 

பூகம்பத்தின் தொடர் அதிர்வுகளால் திகைத்த அனைத்து மாநில மக்களுக்கும் தன் கருத்தான எதிர் அதிர்வுகளை பரவலாக்கி இடும்பைக்கு இடும்பை தந்து கொண்டிருப்பவர் நம் முதல்வரே! 

பூகம்பம் தன் அதிர்வுகளை கூட்டவும் முடியாமல் நிறுத்தவும் இயலாது திணறிக் கொண்டிருப்பது இவ்வெதிர் அதிர்வுகளால் மட்டுமே என்பது சர்வ நிச்சயம். 


*சௌ.ராசா

Comments

Popular posts from this blog

🌷A beautiful writeup from Sudha Murthy

வெளிநாட்டு வாழ்க்கை - வயதான பெற்றோர்- எது நம் கடமை ?