தினமலர் வாரமலர் 11, மே, 2025 இதழ், விண்ணையும் தொடுவேன் ! இந்துமதி யின் தொடர்கதை 10 ம் அத்தியாயம். https://www.dinamalar.com/malarkal/vara-malar-weekly-magazine/varamalar-story-vinnaiyum-thoduven/70591 இந்த கதையை இன்று மே,20, அன்று படிக்கக் கிடைக்கப் பெற்றேன். இதில், 'நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்த நண்பர்கள் பிரபாகரும், புகழேந்தியும் அவர்கள் உரையாடிய பல விஷயங்களில், ஒன்று, இந்தியப் சமுதாயத்தில் இன்று புரையோடி கிடக்கும், தினசரி செய்தத்தாள்களிலும், மீடியாக்களிலும் இந்த குற்றச்செயல்கள் பற்றி இடம்பெறாத நாளே இல்லை என்கிற அளவிற்கு ஆங்காங்கே நடைபெறுகிற "பாலியல் வன்முறை, துன்புறுத்தல், கூட்டு பலாத்காரம் ..." பற்றியதானது. குறிப்பாக, இது குறித்தான, ஒரு வெளிநாட்டு பத்திரிகை எழுதிய ஆராய்ச்சி கட்டுரையில், இடம்பெற்ற குறிப்பு ..... " இந்திய இளைஞர்களை பற்றிய குறிப்பு .... ஆம், வெளிநாட்டு இளைஞர்கள், அநேகமாக வன்புணர்வு, செய்வதில்லை. கூட்டு பாலியலில் ஈடுபடுவதில்லை. பெண்களை மானபங்கப் படுத்துவதில்லை..." என்ற உண்மை. இந்த 'கலாச்சார அதிர்வான' உண்மை அறிந்து மிக அதிர்ந்தேன்...
வெளிநாட்டு வாழ்க்கைக்கு பல வருடங்கள் பழகிய பின், வயதான பெற்றோரை பார்த்துக்கொள்ள, பெற்றோர் தங்களை திரும்ப வரும்படி கேட்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் கடைசி காலத்தில் அவர்களுடன் இருந்து, அவர்களை பார்த்துக் கொள்வது தம் கடமை என்று உணர்ந்து, பெற்றோருக்கு அந்த திருப்தியை தரவும், தாமாக முடிவெடுத்து இந்தியா திரும்பி வந்த ஒரு 'திருமகனின்' சுய விளம்பல் இந்த லிங்கில் விகடன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. லிங்கை அழுத்தி, படிக்கவும். அல்லது லிங்கை copy பண்ணி, Google search ல் தேடி படிக்கவும். ஒருவரின் வாழ்க்கை பிறருக்கு 'பாடம் ' . முடிவெடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு, முடிவெடுக்க இந்தப் பதிவு ஒரு 'ஊன்றுகோல்'. https://www.vikatan.com/lifestyle/culture/businessman-aniruddha-anjana-returns-to-india-from-america-why இதைப் படித்தப் பின்னர் இன்னும் ஒருவராவது வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி வந்தால் அதுவே இந்தப் பதிவின் வெற்றி...! "எவரும் வாழலாம், எப்படியும் வாழலாம், பெற்று, வளர்த்து, படிக்கவைத்து, இன்று இந்த நிலைக்கு வாழ்வில் உயர காரணமாக இருந்த பெற்றோ...
Comments
Post a Comment