கடல் சேறாகாது...!
எவ்வளவுதான் கலக்கினாலும் கடல் சேறாகாது!
நம்மை எவர், எவ்வளவுதான் குழப்பி னாலும், நாம் குழம்பிவிடாத அளவு தெளிவுடையவராக கடல் அளவு மனம் உடையவராக இருத்தல் நலம்.
கடல் அளவு சரி. விசாலமாக, தன்னுள் வரும் எதையும், எந்த அளவிற்கும் கொள்ளும், ஜீரணிக்கும், தன்நிலை பாதிக்காது... இதெல்லாம் சரி ! கடலுக்கு என்று சில குறைபாடுகள் உள்ளதே. கடற்கரை பகுதியில் அலை எப்பொழுதும் அடித்துக் கொண்டே உள்ளதே... அமைதியில்லாது இரைச்சல் மிகுந்ததாக உள்ளதே!
விசால மனசு உடைய வருக்கும் அப்படித்தானே அமைதியின்மை இருக்கும்!
கடற்கரை பகுதியில் வேண்டுமானால் அப்படி இருக்கும்... கடலின் உள்ளே செல்லச் செல்ல நடுப்பகுதியில் அமைதி மிகுந்திருக்கும். அந்த அமைதியின் அளவை பழகாதவருக்கு அது பயமுறுத்துவதாகவும் இருக்கும்! பழகியவருக்கு அது பேரானந்தத்தை உணரவும் முடியும்!
அப்படி மனதின் உள் பயணித்து அமைதி தேடுவது தியானம் பழகும் வகையினால் கை கூடலாம்!
நடுக்கடலில் கடைந்து தேவர்கள் அமுதத்தை (அமுதம் போன்ற நல்ல விஷயங்களை, கண்டுபிடிப்புகளை) வெளிக்கொணர்ந்தார் கள் என்று புராணங்கள் சொல்கின்றன!
[ இன்னும் எண்ண ஓட்டங்களை செலுத்த, செலுத்த ஏராளமாக தோன்றுகிறது... சூழ்நிலை கைதியாக மற்றைய பொறுப்பு நிர்பந்தங்களுக்கு ஆட்பட்ட சாதாரண மனிதனாகவே இருப்பதால் இன்னும் முழு எழுத்தாளனாக பரிணமிக்க இயலவில்லை... என்றாலும் முயற்சியை கைவிடவில்லை என்பதற்கேற்ப இந்த சிறு அளவிலான எண்ணப் பதிவை எழுதியுள்ளேன்! ]
Comments
Post a Comment