உறவுச் சிக்கல்கள்...!
விளையாட்டுக் கல்யாணமே... பெரும் விபரீத உறவாகுமே...! தலை மாறி கால் மாறுமே வரும் சொந்தங்கள் தடுமாறுமே !!
இப்படித்தான் சில திருமணங்கள் சரியாக ஆராயாமல், பொருத்தங்களை சரி(யாக) பார்க்காமல் அவசர கதியில், தன்னால் முடிந்தது என்ற நற்பெயர் பெற வேண்டிய சில உறவுகளின் (மன) 'அழுத்தம்' காரணமாகவும் அமைந்து விடுகிறது.
அப்படிபட்ட சில திருமணங்கள், தடம்புரண்ட இரயில் பெட்டியை அப்படியே இழுத்து செல்வது போல வாழ்க்கையும் அவர்களை இழுத்துச் சென்று, பேரன், பேத்திகள் வரை கையில் தந்து அனுபவங்களை வாரி வழங்கிய பின்னும், தம் வாழ்க்கையில் 'அதிருப்தியே' மேலோங்கி இருக்க, ( 60/70 வயதான பின்பும்) தங்கள் திருமண பொருத்தம் பார்த்து முடித்து வைத்தவர்களை திட்டி தீர்த்துக் கொண்டு அதில் திருப்தி காண்பவர்களை என்னவென்று சொல்வது...!
இப்போது முதல் நான்கு வரிகளை படியுங்கள்... இந்த சூழலில் சிக்கிய ஜோடிகளுக்கு எவ்வளவு பொருத்தமான பாடல் வரிகள் அவை !
https://youtu.be/XmVvVKxF8So
நாலு பேருக்கு நன்றி - தமிழ்ப் படத்தின் லிங்க். இந்த உறவுச் சிக்கலை விளம்பும் ஒரு படம்.
Comments
Post a Comment