இப்படியாகிலும் ...!
இப்படியாகிலும் ...! இறுதிவரை...!!
தொடுகைகளே உணர்வுகளின் கடத்தியாக
உன்னை என்னிடம் கொண்டு சேர்த்ததோ...?
பார்வைகளும் அதை கடத்தியே என் மனதை
உன்னிடம் சேர்த்ததோ ?
அப்படியே இணைந்திருந்தோம் சிலகாலம்.....
ஆனால் இணைவு தளர்ந்ததேனோ இன்று ;
காலம் தந்த சோர்வா - இல்லை உணர்வுகளின் அதீதம் தந்த சோர்வா?
அறியேன் - ஆனாலும்
உன் பார்வை எல்லைக்குள் உள்ளேன் என்பதே, இன்று,
என் மனம் கொள்ளும் நிம்மதி!
இப்படியாகிலும் இருப்போம் இனி வரும் நாட்களில்...
ஜன்னலுக்கு திரையாய்,
இருக்கைக்கு அழகு உரையாய், நுழைவாசல் முன் மிதியடியாய்!
Comments
Post a Comment