சாதாரண / பிரமாதங்கள்...!
சாதாரண விஷயங்கள் பிரமாதப்படுத்தப்படுவதும், பிரமாத விஷயங்கள் சாதாரண படுத்தப்பட்டு கொச்சையாக்கப் படுவதும், வதந்திகள் புரியும் மாயாஜாலங்கள். இப்படிப்பட்ட மாயாஜாலங்களை நம்பியே இன்று அரசியல் கட்சிகள் பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த வதந்தி என்கிற மாயாஜாலங்கள் மக்களை குழப்புவதில் பெரும் வெற்றியை ஆரம்பத்தில் காண்பது போல் தெரிந்தாலும், அதையும் மீறி மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். அது தேர்தலின் போது தெரிந்து விடுகிறது.
இது சாதாரண நரி தன்மேல் நீலநிற சாயம் பூசப்பட்டு நீல நிற 'வினோத மிருகமாக' காட்டில் அனைத்து மிருகங்களையும் ஆட்டி படைத்தது போல உள்ளது. ஒரு பெரும் மழையில் சாயம் வெளுத்து தான் சாதாரண நரி என்பது தெரிந்துகொண்ட அனைத்து மிருகங்களாலும் துரத்தப்பட்டு துன்பப்ட்ட கதையாக கட்சிகள் பல்லிளிப்பதும் மக்கள் கண்டு களிக்கும் காட்சிகளே !
Comments
Post a Comment