ராகுகாலம்.
ராகு காலம் கணக்கிடுவது எப்படி...?
1. ஒரு வாய்ப்பாடு மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.
2. " திரு நாள் சந்தடியில் வெய்யிலில் புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா "
3. இந்த வாய்ப்பாடில் ஏழு வார்த்தைகள் உள்ளது. ஒவ்வொரு வார்த்தைகளின் முதல் எழுத்தும் அந்த எழுத்தில் தொடங்கும் கிழமையை குறிக்கும்.
4.
திரு நாள்..... தி... திங்கள் கிழமை
சந்தடியில்... ச... சனிக்கிழமை
வெய்யிலில்.. வெ.. வெள்ளி ,,
புறப்பட்டு..... பு.. புதன்கிழமை
விளையாட.. வி.. வியாழக்கிழமை
செல்வது ... செ.. செவ்வாய் ,,
ஞாயமா.... ஞா.. ஞாயிறு ,,
5. வார்த்தைகள் அமைக்கப்பட்டுள்ள அதே வரிசையில், வார நாட்கள் கிழமைகளில் ராகு காலம் 1 1/2 மணி நேரம் அமைகிறது.
அதாவது...
திங்கள் - காலை 7.30 - 9.00 வரை
சனி - ,, 9.00 - 10.30 வரை
வெள்ளி - ,, 10.30 - 12.00 ,,
புதன் - ,, 12.00 - 13.30 ,,
வியாழன் - ,, 13.30 - 15.00 ,,
செவ்வாய் - ,, 15.00 - 16.30 ,,
ஞாயிறு - ,, 16.30 - 18.00 ,,
இதை விரல் நுனியில் வைத்திருந்தால் காலண்டர், பஞ்சாங்கம் உதவியின்றி ராகுகாலம் பார்க்கலாம் !
Comments
Post a Comment