நம் கைகள்.. கால்கள் !
நம் கைகள்.. கால்கள் !
மனித உறுப்புகளில் கைகள், கால்கள் ஒரு ஒற்றுமை ;
இரண்டும் இரண்டிரண்டு உண்டு!
ஒரே நீளம், அளவு, ஒத்த அசைவுகள் .
இவை ஒற்றுமை !
கைகள் இரண்டும் சேர்கிறபோது, ஒரு ஆக்கம் விளைகிறது.
அணைத்து பிடித்தல், அரவணைப்பு உறவு வளரும்!
கால்கள் இரண்டும் சேர்ந்து நிற்கும் நிலையில் ஒரே இடத்தில் நிற்க மட்டுமே முடியும்!
ஒன்றை ஒன்று விலகி அசையும் போது நடக்க, கடக்க, ஓட முடிகிறது! தூரம் சென்று உறவுகளை வளர்க்க முடியும்!
ஒன்று இணைந்தால் வளரும், அது கைகள்.
ஒன்று விலகினால் வளரும்... அது கால்கள் !
Comments
Post a Comment