தமிழர் ஒரு நாளினை தற்காலத்தில் உள்ளதைப் போல நொடி, நிமிடம், மணிநேரம் என்று அளக்காமல் தற்பரை, வினாடி, நாழிகை, ஓரை, பொழுது என அளந்தனர்.
ஒரு நாளின் பொழுதுகளை ஆறு சிறு பொழுதுகளாகவும், ஒவ்வொரு சிறும்பொழுதும் 4 ஓரைகளாகவும் பகுத்தனர். மொத்தம் ஒரு நாள் 24 ஒரைகளைக் கொண்டிருக்கும். சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து(காலை) ஒரு நாள் தொடங்குகிறது. அந்நேரத்திலிருந்து தான், அந்நாளின் ஓரையும் கணக்கிடப்படுகிறது. ஒரு நாளின் தொடக்க ஓரை எவ்வகை ஓரையாக வருகிறதோ அந்நாள் அவ்வோரையின் பெயரில் அழைக்கப்படுகிறது. உதாரணமாக சனி ஓரை முதலில் தொடங்கினால் அன்று சனிக்கிழமை.இவ்வாறுதான் கிழமை முறை வந்திருக்க வேண்டும்.
அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன்(வெள்ளி) ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு(வியாழன்) ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும். இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன்கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை. பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டு ஓரைகள் கணக்கிடப்படுகின்றன..
ஒரு நாளில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என கணிதம் செய்திட இந்த ஓரைகள் பயன்படுகின்றன..ஒரு நல்ல காரியம் செய்ய அசுப கிரக ஆதிக்கம் பெற்ற ஓரைகளை தவிர்த்து ,சுப கிரக ஓரைகளில் அக்காரியத்தை நம் முன்னோர் செய்து வந்தனர்..பொண்ணு பார்க்க போனால்கூட சுக்கிர ஓரையில் போனால் நல்லது நடக்கும்...
ஒரு காரியத்தை செய்ய நினைக்கும்போது,அந்த நேரம் ராகு காலமா ,எமகண்டமா,குளிகை நேரமா..அன்று என்ன கிழமை ,திதி என்ன,நட்சத்திரம் என்ன ,என ஜோதிடரிடம் ஆலோசிக்க வேண்டும்..ஆனால் அவசரத்துக்கு , நல்ல ஓரையா இருந்தால் போதும் என முடிவு செய்து விடுவர்.
எந்த காரியத்துக்கு என்ன ஓரை என கணக்கு இருக்கிறது....சனி,செவ்வாய்,சூரியன் ஓரைகள் அசுப ஓரையாக இருந்தாலும் முற்றிலும் தவிர்ப்பதில்லை...அரசாங்க காரியம் நடக்க வேண்டும் எனில் சூரிய ஓரையில் முயற்சிக்கலாம்...நெருப்பு,கோர்ட் ,வழக்கு சார்ந்த பிரச்சினைகள் ,எதிரி சார்ந்த பிரச்சினைகள் என்றால் செவ்வாய் ஓரையில் செய்யலாம்..
சுபகாரியம் செய்யும்போது முக்கியமான விசயம் ஒருவரிடம் பேச முயற்சிக்கும்போதும் ,இப்போது ராகு காலமா,எமகண்ட நேரமா,சுப கிரகத்தின் ஓரையா எனா ஒருமுறை காலண்டரில் கவனிப்பது நல்லது.சுக்கிரன்,புதன்,குரு இவற்றின் ஓரைகள் எல்லா சுப காரியங்களுக்கும் சிறப்பு.
சிலர் மிதுன லக்னத்துக்கு யோகாதிபதி ,லக்னாதிபதி புதன் எனில் புதன் ஓரையையே பயன்படுத்தி வெற்றி பெறுவர்.இவ்வாறு நுணுக்கமாக எல்லோராலும் பார்க்க முடியாது.அவர்கள் சுக்கிரன்,புதன்,குரு ஓரையை கவனித்தாலே போதுமானது
Comments
Post a Comment