ஆசைகள்...!
"ஆடி வெள்ளம் அடங்குனாலும் ஆசை வெள்ளம் அடங்காது...! "
"ஆசையேஅலைபோலே ... நாமெல்லாம் அதன்மேலே ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே...!
இவையெல்லாம் ஆசையைப் பற்றிய பரிமாணங்களை விளக்கும் திரை இசைப் பாடல் வரிகள்...!
உலகியல் உயிர் வகைகளில் தாவரங்கள், விலங்குகளை உற்று நோக்கினால் அவைகளிடத்தில் ஆசைகள் என்பதே இல்லை... அவைகள் உலகம் உயிர் விரிவாக்கம் தவிர்த்து, பொருளாதார விரிவாக்கம் என்பதே இல்லை என்பது புரியும்.
( இந்த வரியை எழுதிக் கொண்டிருந்த போது ஒரு தொலைபேசி அழைப்பு...தஞ்சையில் தம்பி மருமகள் கருவுற்றிருக்கும் செய்தி... நல்ல செய்தி ... இதுவும் ஆசை அடிப்படையில் உலக உயிர் பெருக்கம் சார்ந்ததே)
மனித உயிர் தோன்றி இந்நாள் வரையிலும் உலகம் கண்ட வளர்ச்சி கள், மாற்றங்கள், அனுபவிக்கும் வசதிகள்அனைத்தும் மனிதனின் ஆசை களால் விளைந்ததுவே !
தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளின் ஆசான் என்பார்கள்.
தேவைகள், ஆசைகள் ஒட்டி பிறந்த இரட்டை பிறவிகள்.
பறவையை கண்டான் விமானம் படைத்தான்.
பனித் துளி வழி பார்த்தவன் தொலைநோக்கியை படைத்தான்.
எதனைக் கண்டான், சாதி, மதங்களை படைத்தான், மனதில் வெறுப்பை வளர்த்தான் ...!
ஆசை புற வளர்ச்சிக்கு வித்திடும்.
ஆசையின்மை 'அக' வளர்ச்சிக்கு அன்பை விதைத்திடும்.
உற்பத்தியாளரின் 'லாப இலக்கு' (%), ஆசையின் விளைவே!
விவசாயிகள் அரசிடம் கேட்கும்
' குறைந்தபட்ச விலை நிர்ணயம் '
விவசாயிகளின் அத்தியாவசியம்.
அதை மறுப்பது அரசின் ஆசையின் விளைவு.
'குறைந்தபட்ச' விலையை மறுக்கும் அரசு 'அதிகபட்ச விலை' யில் லாபத்தின் விகிதத்தை கட்டுப்படுத்த மறுப்பதும் இயலாமையின், ஆசையின் ( தங்களின், அமைப்பின் பணத் தேவைகளுக்கு அவர்களை சார்ந்திருப்பது) விளைவே.
Comments
Post a Comment