அன்னையர் தினம்...?
அன்னையர் தினம்...?
அன்னை என்பவள் அன்னையர் தினத்தில் மட்டும் நினைகூறப்பட வேண்டியவள் அல்ல... அனுதினமும், அனு நொடியும் உணர்வில் கலந்து உணரப்படவேண்டியவள். கொண்டாடப்பட வேண்டியவள்...! ஆம், ஜாக்கிரதை... அதற்காக தலை மேலே தூக்கிப் பிடித்து கொண்டாட வேண்டாம் ;
அன்னைக்கு மூச்சு முட்டும்...
தாங்கி நிற்கும் கைகள் நொடித்து கீழ் விழுந்து விடுவோமோ என்று பயமே அவளை கொல்லும். கொண்டாட்டம் மனதில் இருக்கட்டும்...
அன்னை மனதுக்கு இதம் தரும் அளவிற்கு அவளின் பணிச்சுமை களை சற்றே குறைத்தால் போதும்... குறைந்தபட்சம் சுமையை ஏற்றாமல் இருந்தால் போதும்.
ஆனாலும் அன்னையர் தினம்...
வாழ்த்துக்கள்... அனைத்து அன்னைய ருக்கும்...
வாழும் நாளில் கொண்டாட மறந்த என் அன்னை க்கும் சேர்த்து!
Comments
Post a Comment