நோயற்று வாழ... பின்பற்றும் விரதம்...!


சுகிசிவம் ஐயாவின் சொற்பொழிவு...! 

 https://youtu.be/xUz7EzHU2kE

இவர் தம் உரையில் நாம் பயனுற கருத்து குவியல்கள் ஏராளம் உண்டு. 

அவைகளில் குறிப்பாக நோயற்று வாழ, உற்ற நோய்களில் இருந்து விடுபட குறிப்பாக சில கருத்துக்களை சொல்கிறார். 

1. மாலை 6 மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும். பின் எதையும் உண்ணவும், அருந்தவும் கூடாது. 

2. காலை உணவுக்கு பெயர் "பிரேக் ஃபாஸ்ட்". அதாவது விரதத்தை முடித்துக் கொண்டு எடுத்துக் கொள்ளும் உணவு என்று பொருள்.   விரதம் என்பது குறைந்தபட்சம் 12 மணிநேரம் எதையும் உண்ணாமல் கடைபிடிக்கும் நோன்பு.  16 மணி நேர விரதம் சாலச்சிறந்தது.    சர்க்கரை நோயாளிகள் இரத்த பரிசோதனைக்கு செல்லும் போது 12 மணி நேரம் எதையும் சாப்பிடாமல் இடைவெளி அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

3. அரிசி, கோதுமை மட்டும் அல்ல மாவாக அரைத்த எந்த பொருளும் உண்ணாமல் இருப்பது மிகவும் நல்லது. நோய்களை தூரத்தில் நிறுத்தும்.        காலை உணவு இட்டிலி க்கு சாம்பார் அவசியம். பருப்பு புரதம் உடல் நலனுக்கு அவசியம். கூடவே சாம்பாரில் காய்கறிகள் இருத்தல் கூடுதல் பயன்பாடு. 

4. காய்கறிகள் சமைத்து முழு உணவாக, குறிப்பாக இரவு உணவாக இருந்தாலும் மிக நல்லது. 

5. இப்படியாக நம் உணவை அமைத்துக் கொண்டால் தானாகவே மூன்று வேளை உணவு இரண்டு வேளையாக குறைந்து, 16 மணி நேர விரதம் அமைந்துவிடும். 

இதுபோல் இன்னும் நிறைய பயனுள்ள குறிப்புகள் நிறையத் தருகிறார் தன் உரையில். 

4. 

Comments

Popular posts from this blog

Expert Talk

மனைவி வருகிறாள்...!

Fathima Babu and Babu - interviw