மௌனம் பழகு / மழையே...
*சௌ.ராசா* https://open.spotify.com/episode/2nMwTj0OyNXHUUK5HkH9WA?si=nynlT9oUSI-JKqfiMKq66Q
மௌனம் பழகு...!
மௌனம் பழகுவது என்றால் என்ன ?
எப்படி பழகுவது ?
மிக எளிது !
உங்களுக்கு சௌகரியமான, அமைதியான சூழலை, வீட்டினுள் இருந்தாலும் சரி, வெளிப்புறம், மொட்டை மாடி வெளி, எதுவாக இருந்தாலும் சரி.
ஒரு நாற்காலி அல்லது தரையில் ஒரு துணி விரிப்பு மீது அமர்ந்து கொள்ளுங்கள் !
கண்களை மென்மையாக மூடி அமரலாம். அல்லது கண்முன் நேர் கொண்ட பார்வையில் ஒரு தீபம் ஏற்றி அந்தச் சுடரை மென்மையாக தொடர்ந்து பார்க்கவும். உற்று பார்க்க வேண்டாம். மென்மையாக பார்க்கவும்.
உடல் நிமிர்ந்த நிலையில் இருக்கட்டும்.
உடல் அசைவற்று, கண் அசைவற்று இருக்கட்டும்.
எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் ?
ஒருநாள், 24 மணி நேரம், அல்லது 60 நாழிகையில் ஒரு சிறு பொழுது இப்படி மௌனம் பழகுவது நன்று.
முதலில் ஒரு நிமிடம் இப்படி உடல், மனம், கண் அசைவற்று இருக்க பழகுவோம் .
இது வெற்றிகரமாக, சுலபமாக சில தினங்களுக்கு முடிந்ததும் பின் 5 நிமிடம் என்று நேர அளவை விரிவு படுத்தவும் .
பின் 20 நிமிடம் ( 1 நாழிகை) நேர அளவிற்கு மௌனம் பழகுவோம்.
இது ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். பழக, பழக சுலபமாக, எளிதில் கை கூடும்.
இப்போது உடல், மன நிலையில் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள் என்று குறித்துக் கொள்ளுங்கள்.
நல்ல மாற்றங்களை உணர்ந்தால் இதை தொடருங்கள்.
எப்பொழுதெல்லாம் சமயம் வாய்க்கிறதோ, காத்திருக்கும் நேரம், பயண நேரம், இரு வேறு பணிகளுக்கு இடைபட்ட சிறு இடைவெளி நேரம் இப்படி கண்டுபிடிக்கும் நேரங்களில் மௌனம் பழகுங்கள்.
நல்ல பலன்களை பெறுங்கள்... உங்கள் அன்றாட செயல்களில் ஒரு ஒழுங்கு ஏற்படும், பிரச்சனைகளுக்கு தீர்வு எளிதில் மனம் அடையாளப் படுத்தும்.
உங்களின் திறமை, தீர்க்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் !
வாழ்க்கை வாழ்வதற்கே !
வாழ்க வளமுடன் !!
Comments
Post a Comment