எனது (கவிதை) கிறுக்கல்கள்...!
(தானாதன்ன தந்தன தானே..)
காணாதன கண்டதாரு ... கருத்துக்குள்ள பூந்ததா(து யா)ரு,
ஏதாவது செய்து பாரு - வாழ்வில் ஏற்றந்தானே வருகுது பாரு...!
எங்கள் ஜெயராமன் சின்னாயினா... ஓடிக்கொண்டிருக்கும்ஆறுபோல... ஆறு... அது செல்லும் வழியெல்லாம் செழிக்க செய்வது போல... தன் ரயில்வே பணியில் பயணம் செய்து கொண்டே இருந்தவர். அவரின் வருகையால் எங்கள் வீட்டில் வசந்தத்தை வீசியவர்... ஆதலாலே அவர் வீட்டில் அடிக்கடி வீசியது புயலே !
என் பள்ளி திறக்கும் நாள், அவர் மூக்கில் வேர்க்கும் ; வருவார்... பாட புத்தகங்கள், நோட்டுகள் பட்டியலை கேட்பார், தருவேன்... கை பிடித்து அழைத்துச் செல்வார்... அத்தனையும் வாங்கித் தருவார்... அவர் அருளாலே பள்ளிப்படிப்பை முடித்தேன் !
Comments
Post a Comment