Expert Talk
இன்று 15.11.2014 காலை பேத்திகள் பள்ளியில் விட்டு விட்டு திரும்புகையில் டீக்கடை யில் 'சர்க்கரை' வேண்டாம் 'நாட்டு சர்க்கரை' சேர்த்து டீ தர சொல்லிவிட்டு மேசையில் அமர்ந்தேன். அங்கு ஒரு சிறு காகிதத் துண்டு... எடுத்துப் பார்த்தேன்... அதில் ஒரு புகைப்படம் ஏற்கனவே எதிலோ பார்த்த பிரபலமான நபராக தெரிந்தது. அவர் எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர் மற்றும் இயக்குனர். என்ன சொல்கிறார் என்று படித்தேன்.
உடலின் DNA கூறுகளும் சாப்பிடும் உணவின் சம உறவு கூறுகளுடன் Interact செய்யும் போது அதில் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாத மாறுபட்ட தன்மைகள், ஜீரணிக்க முடியாமல் முரண்பட்ட தன்மைகள், DNA வின் புதிய 'பிரதி' களில் பதிவாகும்.
https://photos.app.goo.gl/ML23BiKiVzb9EgSw8
( Click above link to read the Article of EXPERT TALK)
இதை படித்தபோது, ஒரு தம்பதிக்கு பிறக்கும் இரு குழந்தைகளில் அமையும் குண முரண்பாடுகள், சண்டையிடும் தன்மைகள் இதெல்லாவற்றிற்கும் இவர் சொல்லும் உணவு பழக்கங்களில், கால இடைவெளியில், பெற்றோருக்கு ஏற்படும் மாறுதல்கள் காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. சாத்வீக உணவு முறை, மாமிச உணவுமுறை, 'அவசர' உணவுகள் ( Fast Food), இவைகள் மனித நடவடிக்கைகளில் மாற்றங்கள், மாமிச உணவு முறையில் நீண்ட காலமாக இருந்து வரும் ( பெரிய மாற்றங்கள் இன்றி) நபர்களிடம் சாத்வீகமான குணங்கள் மிகுந்தும், காணப்படுவதற்கு இந்த உடற் கூறு, உணவு கூறு உறவுகளில் எற்படும் சமரசங்கள் அல்லது உரசல்களோ என்றும் தோன்றுகிறது.
இந்த கட்டுரை பாய்ச்சும் வெளிச்சத்தில் உணவு தவிர்த்து மேலும் பல வாழ்வியல் காரணங்கள், அதிகாலையில் விழித்தல், உடற்பயிற்சி, தியானம், திட்டமிட்டு காரிய மாற்றல், தேர்ந்து பேசும் வார்த்தைகள் , இன்னும் பலவற்றை நல்லவை களாக அமைத்துக் கொள்ளுதல், தொடர்ந்து கவனமாக பழகுதல் இவையெல்லாம் கூட DNA கூறு மறுபதிப்பு களில் வெளிப்படும்.
"செய்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க செய்யாமையாலும் கெடும்".
இது வள்ளுவர் வாக்கு. இந்த கட்டுரையின் நோக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.
*சௌ.ராசா*
Comments
Post a Comment