இன்று ஒரு பாடம் - 2

இன்று ஒரு பாடம் - 2

நாம் தினசரி படிக்கும் பாடங்கள் எத்தனையோ... பள்ளியில், கல்லூரியில் படித்ததை விடவும் இன்று நம்முன் கைபேசியில் வந்து, விழுந்து, விரியும் தகவல்கள் ஒவ்வொன்றும் ஒரு பாடமே. .. பாடம் என்றுதான் சொன்னேன்... நல்ல பாடம் என்று சொல்லவில்லை...! அதை அவரவரின் அறிவும், விவேகமும் தான் முடிவுசெய்ய வேண்டும்.

இதை சொல்கிற்போது, சுமார் 25 வருடங்கள் முன்பு, ஓர் துறைமுக உயர் அதிகாரியின் அறையில் எழுதப்பட்டிருந்த ' பிரார்த்தனை வாசகம் ' நினைவுக்கு வருகிறது ... அதாவது:

" கடவுளே, மாற்றத் தகுந்த அனைத்தையும் மாற்றுதற்குரிய சக்தியை கொடு ; மாற்ற முடியாத எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை கொடு ; இவ்விரண்டையும் பிரித்தறியும் அறிவை கொடு !"

God Give me the Power to Change the Thing I can ; Serinity to Accept the Thing I Can't; and Wisdom to Distinguish the Both. !

இதை மிகச்சிறந்த பிரார்த்தனை ஆக என் ஆழ்மனம் வரித்துக்கொண்டது. 

அன்றாடம் கிடைக்கும் பாடங்களில், மிகச்சிறந்த ஒன்றை ( மனதளவிலாவது ) செயல்படுத்த முயலவேண்டும். பெற்ற பாடம், செயலில் தான் முடிவுறும். அன்றில் அது பயனற்றது. 

*செள.ராசா*

Comments

Popular posts from this blog

Expert Talk

மனைவி வருகிறாள்...!

Fathima Babu and Babu - interviw