My IntroVersion
சௌ. ராசா, தனக்குள்ளே பேசுகிறான். ( Introversion)
என்னால் எதையும் எனக்குள்ளே பேசுவது எளிதாக வருகிறது... நிறைய வார்த்தைகள், பரிமாணங்கள், நினைவு படங்கள் ( Visuals) கிடைக்கிறது.. ஒன்றுடன் ஒன்று இணைத்து, வெட்டி, ஒட்டி, புதிய ஒன்றை உருவாக்க முடிகிறது.
வெளியே எவருடனும் பேசும்போது இந்த மாயா ஜாலங்கள் நடப்பதில்லை. வார்த்தைகள் கிடைப்பதில்லை.. அல்லது தாமதமாக கிடைக்கிறது.. அதனால் கோர்வையாக பேசுவது தட்டுகிறது.. பின்னர் வர வேண்டிய வார்த்தை முந்திக்கொண்டு வந்து விழுகிறது. இது சக மனிதர்களிடம் உறவுச் சிக்கலை ஏற்படுத்துகிறது... இந்த தடுமாற்றங்களை, வெளி மனிதர்கள் புரிந்து கொண்டு அனுசரிக்கும் அளவுக்கு வீட்டில் நெருங்கிய உறவுகளிடம் புரிதல் இல்லை... அனுசரணை இல்லை..! இதனால் 'தனிமைக்குள்'தள்ளப்படுகிறேன். தனிமையே சௌகரியமாக இருப்பதை உணர்கிறேன்.
உதாரணத்திற்கு, மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மகளை தேடும்போது கிடைப்பதில்லை... கிடைக்கும் போது, வாழ்த்துச் சொல்ல மறந்து விடுகிறது.. அல்லது சொல்ல நினைத்தது கோர்வையாக வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாற்றம்.. மனதில் பெரும் பாரமாக, மிக சோர்வாக உணர்கிறேன். அதுவே உள்ளுக்குள் பேசி, நடு இரவில் விழித்துப் கூட, ஒரு வாழ்த்துரை யாக தயாரித்து அனுப்புவது சுலபமாக உள்ளது. 'சமீபகால தொழில்நுட்ப' வசதி மேலும் கை கொடுக்கிறது.
இது என்னிடம் உள்ள 'குறையா', இல்லை ' நிறையா', தெரியவில்லை.
Comments
Post a Comment