IraiThedi - Saranya ...VEL MARAL
IraiThedi - Saranya video
https://youtu.be/D51JxUJva9Q?si=Eqf0zuQcTvpkIwWH
முருகனுடனான அனுபவம்...
முருகன் , வள்ளி கண்ணை பார்த்து ஒரு நொடி ' கனெக்ட்' கிடைத்து பக்தி செய்யும் , அருள் பெறும் மகானுபவம் ... பக்தை யின் சொந்த அனுபவம் !!!
Click above link and see video and see what ms.Saranya says as her Experiences.
***
வேல்மாறல் எப்படி பாராயணம் செய்வது பற்றிய விளக்கம் இந்த காணொளியில்...
Click below link and see video :
https://youtu.be/nwruwt3XlBM?si=iODPr1VAQSPu1mxx
Vel Maaral Lyrics in Tamil
வேல்மாறல் மகா மந்திரம்:- வேல்மாறல் மகா மந்திரம் பாடல் வரிகள்
இந்த மகா மந்திரத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. இந்த பதிவை பத்திரபடித்தி வைத்து கொள்ளவும். தினமும் இருமுறை காலை மாலை பகத்தியுடன் பாராயணம் செய்யவும். அதிவேக சூப்பர் பாஸ்ட் ரயில் என்பது போல் அதிவிரைவில் இந்த மந்திரம் பலன் அளிக்கும்.
***
வேலும் மயிலும் சேவலும் துணை
1.பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.
2. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
3.சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். – திருத்தணியில்…
4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
5. பனைக்கைமுக படக்கரட மதத்தவன கசக்கடவுள்
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்…
6. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்…
7. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்…
8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்…
9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும். – திருத்தணியில்…
10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்…
11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்…
12. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில் ...
13.பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். – திருத்தணியில்…
14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்…
15. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்…
16. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…
Comments
Post a Comment