எண்ணம் போல் வாழ்வு..

எண்ணம் போல் வாழ்வு..

As you think so you become 

யத் பாவம் தத் பவதே 

நேர்மறை சிந்தனை ( positive thinking)


 https://youtu.be/Q5hPIV81M9w?si=IbVSoJ93xZBfIumt

நம் பேச்சை நான்கு விதமாக பேசலாம் ...

நல்ல விஷயத்தை நல்ல மாதிரி பேசுவது;

நல்ல விஷயத்தை கெட்டமாதிரி பேசுவது;

கெட்ட விஷயத்தை நல்ல மாதிரி பேசுவது;

கெட்ட விஷயத்தை கெட்டமாதிரி பேசுவது;

இந்த பேச்சின் மூலம் 'தி சீக்ரெட்' என்ற ஆங்கில புத்தகம். 

10 வருடம் முன்பு அதை படித்திருக்கிறேன். அந்த புத்தகம் எனக்கு தந்த முக்கிய உறவினருக்கு என் நன்றிகள்.

அதில் பல விடயங்களை பழக , பலன் கிடைத்திருக்கிறது... 

பழக்க தோஷம், திடமாக பழகாத பல விடயங்களை இன்றும் வெற்றிபெற முடியவில்லை. 

ஆனாலும் என் வாழ்க்கை இன்றுவரை மிகவும் வெற்றிகரமானது. மிக்க மகிழ்ச்சி. 

                   *****

*கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி...* 

*உள்ளே ஓர் எறும்பு கிடந்தது.* *அதைக்கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்து விட்டான். காபியை வீசினான்... விளைவு?*

*சண்டை ...*

*சந்தோசமானவீடு மூன்று நாள் துக்கவீடாக மாறிவிட்டது.*


*இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது.* 

*அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான்.*

*"உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான்.*

*உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார்.*

 *இது போல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே."*


*மனைவி சிரித்தாள்.* *தன் தவறை உணர்ந்தாள்.-*

*அதன்பிறகு அவர்கள் வீட்டு சர்க்கரையை கவனமாகப் பாதுகாத்தாள்.* *அதனால் காபியில் எறும்பும் சாகவில்லை.* *அவர்கள் வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை .....* 


*வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வதும் சங்கடத்தில் முடிப்பதும் நாம் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறோம் என்பது மட்டுமே தீர்மானிக்கிறது.*


 *நமக்கு மட்டும் தான் கோபம் வரும் எனவும்...* 

*நாம் தவறே செய்யமாட்டோம் எனவும் நாம் நினைக்கக் கூடாது...*

*தவறுகளை நகைச்சுவையாகவோ*

 *அன்பாகவோ சொல்லிப்பாருங்கள்..*

 *அந்தத் தவறு மறுபடி நடக்காது...*

 *ஆனால் காட்டுக்கத்தல் கத்தியோ அதிகாரமாகவோ தவறுகளை சுட்டிக் காட்டினீர்கள் என்றால் அதை விட அதிகமான தவறுகள் நடக்கும் என்பதை மறவாதீர்கள்!!*


*சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது.*

*"உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன்.*

ஆனாலும் 

*ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன்.* 

ஆனால் 

*நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே*

*அதெப்படி?"*


*அதற்கு சாவி,* 

*"நீ என்னை விட பலசாலிதான்.* 

*அதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.*

 *பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்,*

ஆனால் 

*நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்" என்றதாம்.*


🏵️ *அன்பு உலகை ஆளும்* 🏵️


💧 *பொறுமையைவிட மேலான தவமுமில்லை.*


💧 *திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.*


💧 *இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.*


💧 *மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும்.* 

*இருளை விலக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள்*

. *முடியும் வரை அல்ல,*

 *உங்கள் இலக்கினை அடையும் வரை*.




Comments

Popular posts from this blog

Expert Talk

மனைவி வருகிறாள்...!

Fathima Babu and Babu - interviw