உறவு... நம்பிக்கை.. திருத்தம்...!
"நான் இரவு என் மனைவியுடன் உங்க வீட்டில் தங்க வருகிறேன்" என்று தன் நண்பர் ஒருவருக்குத் தொலைபேசியில் ஒருவர் தகவல் தந்தார். அதற்கு அந்த நண்பர் "மகிழ்ச்சி வாருங்கள், ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், உங்கள் ஊரில் இருக்கிற உயர்தரமான பேக்கரியில் கொஞ்சம் காஸ்ட்லியான 'கேக்' வாங்கி வாருங்கள்" என்றார். "எதற்காக" என்று இந்த நண்பர் கேட்க, "என் மகன் தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றான், 'சர்பிரைசாக' அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாகக் கொண்டாட விரும்புகிறேன். என்னால் இப்பொழுது வெளியே செல்ல முடியாது. ஆகையால் நீங்கள் ஊரிலிருந்து வாங்கி வாருங்கள்" என்றார். அவர் கூறியவாறு அந்த நண்பர் கொஞ்சம் அதிகமாகவே செலவழித்து நல்ல 'கேக்' ஒன்றை வாங்கிச் சென்றார். அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும்.இவரும் ஊருக்குக் கிளம்பத் தயாரானார். 'கேக்'கின் விலை என்ன என்று கேட்டு நண்பன் அதற்குண்டான தொகையை கொடுப்பான் என்று எதிர்பார்த்தார். ஆனால், ஒரு அட்டைப் பெட்டியைக் கொடுத்து "கொஞ்சம் பெரியதாக வாங்கி வந்து விட்டீர்கள், மீதமுள்ள 'கேக்'கை உங்கள் குழ...