Posts

Showing posts from October, 2022

Economy... To improve... Ideas !

 https://youtu.be/aFtv49iV70A See the video Government should impose companies to set profit margins 'Not Exceeding ' at Government Target set % of GDP in order to come out of Recession in a Country.  Excessive% profit set by any company, Govt. May withdraw concessions, if any extended to those companies.  Idea is : low profit... Low prices... More consumption.. More production... Contribute for GDP growth...!  Germany, Uk, may try this formula and see the results...!

இந்தி மொழி

 இந்தி மொழி இந்தியர்களின் கட்டாய முதன்மை மொழி - இது ஒன்றிய அரசின் முன்னெடுப்பு, முயற்சி...  இதை ,  https://youtu.be/aDDT5ECYL1Q இந்த காணொளியில் ப. சிதம்பரம் பேச்சை கேட்கும் போது தோன்றிய கற்பனை.... :-

Chat with Vinish...!

            Chat with Vinish...!  Oh.. My peraa... Vinish..... Come and have a cup of tea..... with me....!  No thatha... No thatha...           I don't drink tea thatha...     But only milk thatha...; Ok peraa....                          Let's drink ....as we wish to.... But in company  !  S thatha... S thatha... Will give you company thatha...  For ...you .. to enjoy..... your tea thatha...! 

பிள்ளாய் ... கதை கேளாய்..!

 பிள்ளாய் ... கதை கேளாய்..!  இன்று என்ன கதை வேண்டும்  ? பிள்ளாய் சொல்வாய் - பின் நானும் சிந்தித்து, நூலாக நூற்று, திரியாக திரித்து கதையாக தருவேன். - அதுவே திரிநூலாக உன் மன விளக்கேற்றி வாழ்வில் வெளிச்சம் தரும்... வெற்றிப் பாதைக்கு வழி காட்டும்.  ( இன்று என்ன கதை வேண்டும்  ? ....) 

இப்படியாகிலும் ...!

   இப்படியாகிலும் ...!    இறுதிவரை...!!  தொடுகைகளே உணர்வுகளின் கடத்தியாக  உன்னை என்னிடம் கொண்டு சேர்த்ததோ...?  பார்வைகளும் அதை கடத்தியே என் மனதை  உன்னிடம் சேர்த்ததோ  ?  அப்படியே இணைந்திருந்தோம் சிலகாலம்.....  ஆனால் இணைவு தளர்ந்ததேனோ இன்று ;  காலம் தந்த சோர்வா - இல்லை உணர்வுகளின் அதீதம் தந்த சோர்வா?  அறியேன் - ஆனாலும்  உன் பார்வை எல்லைக்குள் உள்ளேன் என்பதே, இன்று,  என் மனம் கொள்ளும் நிம்மதி!   இப்படியாகிலும் இருப்போம் இனி வரும் நாட்களில்...    ஜன்னலுக்கு திரையாய்,  இருக்கைக்கு அழகு உரையாய், நுழைவாசல் முன் மிதியடியாய்! 

அன்னையர் தினம்...?

 அன்னையர் தினம்...?  அன்னை என்பவள்   அன்னையர் தினத்தில் மட்டும் நினைகூறப்பட வேண்டியவள் அல்ல... அனுதினமும், அனு நொடியும் உணர்வில் கலந்து  உணரப்படவேண்டியவள். கொண்டாடப்பட வேண்டியவள்...!   ஆம், ஜாக்கிரதை... அதற்காக தலை மேலே தூக்கிப் பிடித்து கொண்டாட வேண்டாம் ;  அன்னைக்கு மூச்சு முட்டும்...  தாங்கி நிற்கும் கைகள் நொடித்து கீழ் விழுந்து விடுவோமோ என்று பயமே அவளை கொல்லும். கொண்டாட்டம் மனதில் இருக்கட்டும்...  அன்னை மனதுக்கு இதம் தரும் அளவிற்கு அவளின் பணிச்சுமை களை சற்றே குறைத்தால்  போதும்... குறைந்தபட்சம் சுமையை ஏற்றாமல் இருந்தால் போதும்.  ஆனாலும் அன்னையர் தினம்...  வாழ்த்துக்கள்... அனைத்து அன்னைய ருக்கும்...  வாழும் நாளில் கொண்டாட மறந்த என் அன்னை க்கும் சேர்த்து! 

Pearlvine - வர்த்தக வாய்ப்பு...!

 பர்ல்வைன் வர்த்தக வாய்ப்பு பற்றிய காணொளி லிங்க்... :- https://youtu.be/QiTDTgsCQIA முத்தான முத்தல்லவோ.. முதிர்ந்து வந்த முத்தல்லவோ,  சத்தான மலரல்லவோ கடவுள் தந்த வரமல்லவோ ! நாம் கோர்க்கும் pearlvine... முத்தான முத்தல்லவோ..!! Pearvin business scheme ஐ நான் இப்படியாக பார்க்கிறேன்....! பர்ல்வைன் நிறுவனம் உலகளவில் தரிசு நிலங்களாக தங்கள் வலை தள பரப்பை விரித்து, அதிகபட்ச விளைச்சல் திட்டத்தை அறிவித்து அதற்கான மர விதைகளை, நம் ஒவ்வொருவரையும்  விதைக்க அனுமதித்து , அந்த மரங்கள் வளர்ந்து தரும் பயன்பாட்டை , மரவிளைச்சலில் இணைந்து பணியாற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் 'பணி மூப்பு' வாரியாக பிரித்தளிக்கும் அரிய சேவையை தங்களின் உயரிய மென்பொருளை கொண்டு, செய்துவரும் செயலாக இதை பார்க்கிறேன் ...!!! --++++++++++   முத்துச்சரம்... ஒரு முத்தாக இணைவோம்..! முத்துக்களை இணைப்போம் ! இணையும்போது கட்டணம் ... பின் பெறுவதோ உபரி...வருமானம்...!               வகை வகையாக          ...
 இரவை பகல் விரட்டுகிறது... ஆனாலும்  ஏனோ...                              பகலை இரவு அணைக்கிறது...! 

ஆசைகள்...!

 "ஆடி வெள்ளம் அடங்குனாலும் ஆசை வெள்ளம் அடங்காது...! " "ஆசையேஅலைபோலே ...   நாமெல்லாம் அதன்மேலே ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே...!  இவையெல்லாம் ஆசையைப் பற்றிய பரிமாணங்களை விளக்கும் திரை இசைப் பாடல் வரிகள்...!  உலகியல் உயிர் வகைகளில் தாவரங்கள், விலங்குகளை உற்று நோக்கினால் அவைகளிடத்தில் ஆசைகள் என்பதே இல்லை... அவைகள் உலகம் உயிர் விரிவாக்கம் தவிர்த்து, பொருளாதார விரிவாக்கம் என்பதே இல்லை என்பது புரியும்.  ( இந்த வரியை எழுதிக் கொண்டிருந்த போது ஒரு தொலைபேசி அழைப்பு...தஞ்சையில் தம்பி மருமகள் கருவுற்றிருக்கும் செய்தி... நல்ல செய்தி  ... இதுவும் ஆசை அடிப்படையில் உலக உயிர் பெருக்கம் சார்ந்ததே)  மனித உயிர் தோன்றி இந்நாள் வரையிலும் உலகம் கண்ட வளர்ச்சி கள், மாற்றங்கள், அனுபவிக்கும் வசதிகள்அனைத்தும் மனிதனின் ஆசை களால் விளைந்ததுவே !  தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளின் ஆசான் என்பார்கள்.  தேவைகள், ஆசைகள் ஒட்டி பிறந்த இரட்டை பிறவிகள்.   பறவையை கண்டான் விமானம் படைத்தான்.  பனித் துளி வழி பார்த்தவன் தொலைநோக்கியை படைத்தான்.  எதனைக் கண்டான், சாதி...

உறவுச் சிக்கல்கள்...!

 விளையாட்டுக் கல்யாணமே... பெரும் விபரீத உறவாகுமே...! தலை மாறி கால் மாறுமே         வரும் சொந்தங்கள் தடுமாறுமே !!  இப்படித்தான் சில திருமணங்கள் சரியாக ஆராயாமல், பொருத்தங்களை சரி(யாக) பார்க்காமல் அவசர கதியில், தன்னால் முடிந்தது என்ற நற்பெயர் பெற வேண்டிய சில உறவுகளின் (மன) 'அழுத்தம்' காரணமாகவும் அமைந்து விடுகிறது.  அப்படிபட்ட சில திருமணங்கள், தடம்புரண்ட இரயில் பெட்டியை அப்படியே இழுத்து செல்வது போல வாழ்க்கையும் அவர்களை இழுத்துச் சென்று, பேரன், பேத்திகள் வரை கையில் தந்து அனுபவங்களை வாரி வழங்கிய பின்னும், தம் வாழ்க்கையில் 'அதிருப்தியே' மேலோங்கி இருக்க, ( 60/70 வயதான பின்பும்) தங்கள் திருமண பொருத்தம் பார்த்து முடித்து வைத்தவர்களை திட்டி தீர்த்துக் கொண்டு அதில் திருப்தி காண்பவர்களை என்னவென்று சொல்வது...!  இப்போது முதல் நான்கு வரிகளை படியுங்கள்...  இந்த சூழலில் சிக்கிய ஜோடிகளுக்கு எவ்வளவு பொருத்தமான பாடல் வரிகள் அவை  !  https://youtu.be/XmVvVKxF8So நாலு பேருக்கு நன்றி - தமிழ்ப் படத்தின் லிங்க். இந்த உறவுச் சிக்கலை விளம்பும்  ஒரு படம...

Blinds - problem in Bus stops...!

 https://youtube.com/shorts/9sHA31kmOcQ?feature=share https://youtube.com/shorts/9sHA31kmOcQ?feature=share  In this problem of blinds, there's a scope for project work that using GPS in buses, an audio system in bus stop, can pick up signal from gps and announce the bus number arrival.  Any engineering student can take up this as project work.  This kind of Arrange ments is already there in Electric trains, metro and opther trains, on entry in to a Station announce in each coach the Name of station that train arrived... For the benefit of passengers.

Story -2 for children...!

Story 2 -  Help Rewarded back ....!  He was a student of Stanford University in America. He was not having any relatives but was living alone and unable to pay his college fees and struggle for other expenses for his studies.  He and his friend discussed and took a decision that should conduct a musical event with a famous singer and gather fund by selling tickets for the music show. They found the world famous Piano Artist IGNESI J.BETREVSKY and requested him a date for a musical concerts . His manager said, "Sir will come for the show, but you should pay him $2000. Both have happily agreed for the payment terms. They thought it is a great success as BATREVSKY, having accepted for the event and they meticulously planned everything and worked hard day and night to make this event a grand success. The date fixed for musical concerts had finally came. As there were many important events, shows in the city on the same day, tickets were not sold sufficiently, hence the collec...

Story for children - 1

 Story - 1 GOD is not the GIVERbut  HELP through OTHERS ...!                              -----------      Once upon a time there was a king. Although he was a man of many virtues, the king had no faith in God alone ...!  One day the king went in disguise to find out about the situation in the country. Then he saw two beggars begging in the city ...! A beggar begs by the name of Lord Kandan. Another begged in the name of king ...! The king ordered his servants to bring the two beggars to him, and they brought the two beggars to the king ...!  The king saw  both of them begging and wanted to know  the reason why one person begged saying the name of Lord Kandan and the other saying the name of the King ? The king asked ...! ⚜ Murugan is a beggar who believes in God and said, "O king, Lord Kandan is the protector of the whole world. Only by the grace of Murugan can one be...

முதல் ரசனை என் வலை பக்கத்திற்கு...!

எனது சகோதரன் சரவணன் அனுப்பிய முதல் விமர்சனம்/ரசனை பாராட்டு... எனது வலைப்பக்கம் பார்த்த பின்...!   " idhu karpanai adhikarippadhu matumalla, namadhu thanimaigalaiyum dhoora virattum" அதற்கு எனது பதிலும்... :- "எழுத்து...  கற்பனைகளை கூட்டுவது மட்டுமல்ல...  தனிமையை  தனிமை படுத்தும்..  துரத்தும்...!  இடும்பைக்கு இடும்பை தரும்!                 ----------------

விசைகள்....!

 ஈர்த்த லும், விலக்கலும்  இரு வேறு விசையே!  ( centri petal and centrifugal forces)  அவைகள்  ஒரு நோக்கில் அசையும்  வாகனத்தின் இசைவே !   ஒன்றின் றி வாகனம் அசையாது; மற்று ஒன்றின் றி வாகனம் நிற்காது!  நம் பயணம் ...  நிறுத்து விசை பால்  கொண்ட நம்பிக்கையே , -அன்றி  வேக விசையால் அல்ல  !

கடல் சேறாகாது...!

 எவ்வளவுதான் கலக்கினாலும் கடல் சேறாகாது!  நம்மை எவர், எவ்வளவுதான் குழப்பி னாலும், நாம் குழம்பிவிடாத அளவு தெளிவுடையவராக கடல் அளவு மனம் உடையவராக இருத்தல் நலம்.  கடல் அளவு சரி. விசாலமாக, தன்னுள் வரும் எதையும், எந்த அளவிற்கும் கொள்ளும், ஜீரணிக்கும், தன்நிலை பாதிக்காது... இதெல்லாம் சரி  ! கடலுக்கு என்று சில குறைபாடுகள் உள்ளதே. கடற்கரை பகுதியில் அலை எப்பொழுதும் அடித்துக் கொண்டே உள்ளதே... அமைதியில்லாது இரைச்சல் மிகுந்ததாக உள்ளதே!  விசால மனசு உடைய வருக்கும் அப்படித்தானே அமைதியின்மை இருக்கும்!  கடற்கரை பகுதியில் வேண்டுமானால் அப்படி இருக்கும்... கடலின் உள்ளே செல்லச் செல்ல நடுப்பகுதியில் அமைதி மிகுந்திருக்கும். அந்த அமைதியின் அளவை பழகாதவருக்கு அது பயமுறுத்துவதாகவும் இருக்கும்! பழகியவருக்கு அது பேரானந்தத்தை உணரவும் முடியும்!  அப்படி மனதின் உள் பயணித்து அமைதி தேடுவது தியானம் பழகும் வகையினால் கை கூடலாம்!  நடுக்கடலில் கடைந்து தேவர்கள் அமுதத்தை (அமுதம் போன்ற நல்ல விஷயங்களை, கண்டுபிடிப்புகளை) வெளிக்கொணர்ந்தார் கள் என்று புராணங்கள் சொல்கின்றன!  [ இன்னும் எண்ண ...

பாதுகாப்பு... மூடி !

  நம் தொண்டைப் பகுதியில் இரண்டு பாதைகளைக் பிரிகிறது. ஒன்று சுவாசக் குழாய் பாதை மற்றது உணவுக்குழாய் பாதை. பிரியும் இடத்தில் ஒரு மூடி பொருத்தப்பட்டுள்ளது. அந்த மூடி ஒரு பக்கமாக அசையும் போது மூச்சு குழாய் மூடும். மற்ற பக்கம் அசையும் போது உணவுக் குழாயை மூடும். அந்த மூடியால் ஏதேனும் ஒரு பாதையை மட்டுமே திடமாக மூட முடியும்.  இந்த அமைப்பில் Default ஆக எப்போதும் மூடிய நிலையில் இருப்பது மூச்சுக்குழாய் மட்டுமே! இது பாதுகாப்பு கருதி இறைவனால் வடிவமைக்கப்பட்டுள்ள அமைப்பு.  உணவுக்குழாய் எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்பது படைப்பின் நோக்கம் அல்ல!  எப்போதும் திறந்தே இருக்கும் உணவுக்குழாய் எப்போதும் உணவை உள் கடத்தவே என்று மனிதன் நினைத்தால் அது அவன் தவறு. திறந்தே இருந்தாலும் வயிறு பசித்த போது மட்டும் அளவாக மட்டும் உணவை உட்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு *மனிதன்* பயிற்சி கொள்ளவேண்டும்!  மற்ற உயிரினங்களுக்கு அந்த கட்டுப்பாடு Intuition ஆக உணர்வுபூர்வமாக உள்ளது! 

தீபாவளி வாழ்த்து...!

  தீபாவளி வாழ்த்து... --------------------------------- சுபகிருது வருட தீப ஆவளி திருநாள் பண்டிகை வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சி, மகிழ்ச்சி வெள்ளம் ஆக பாய்ந்து பணம் மழையாக வீட்டின் உள் மட்டும் பொழிந்து... இல் ஆள் தொட்ட தெல்லாம் துலங்கி ... குழந்தைகள் கல்வி செல்வம் மேலோங்கி... மகாலட்சுமி (ஸ்ரீ தேவி) வாசல் வழி நுழைந்து தங்கிட... அவள் சகோதரியோ பின் வாசல் வழி வெளியேற எல்லாம் வல்ல இறைவன் தங்கள் குடும்பத்தாருக்கு அருள்வாராக... ஆசீர்வதிப்பாராக  !!! இவண், *சௌ. ராஜன்* சென்னை 8838470848

சந்தோஷம் - ஒரு கூற்று..!

 சந்தோஷம் - ஒரு மனைவியின் கூற்று...!  ( நான் படித்ததில் பிடித்தது)  மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்களும், எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களும் இந்த பதிவு சமர்ப்பணம். ______________________________________  பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியை பார்த்து கேட்டார். "உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?" அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை.  அவர் சந்தோஷமாகவே இருந்தார்.   ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார்.  கணவர் அதிர்ந்தார்.  ஆனால், மனைவி தொடர்ந்தார்.   "என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை.  என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை.  ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை.  என்னையே சார்ந்தது.  நான் சந்தோஷமாக இருக...

Great idea from Ratan Tata...!

 https://photos.app.goo.gl/nVQU2Ny7cnNDWf8F9 5:04 AM  "மதுவிற்பனையை ஆதார் கார்ட் மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் உணவுக்கான மானியங்கள் நிறுத்தப்படவேண்டும். மது வாங்க வசதி உள்ளவர்களால் கண்டிப்பாக உணவும் வாங்க முடியும். நாம் அவர்களுக்கு இலவசமாக உணவைக் கொடுத்தால் அவர்கள் பணத்தைக் கொடுத்து மது வாங்குகிறார்கள்."  -ரத்தன் டாடா. ஐயா,             மானிய உணவு மது அருந்துதல் குடும்ப உறுப்பினர்களுக்கு பசி தீர்க்க உதவும் அல்லவா! அதை தடுக்கும் யோசனைகள் வேண்டாமே  ! 

சுற்றுச்சூழல் பாதிப்பு குறைய

 சுற்றுச்சூழல் பாதிப்பு குறைய யோசனை...!  டூத்பேஸ்டு அட்டை கவரை தவிர்த்தால், கணிசமான அளவு குப்பைகளை தவிர்க்க இயலும்...! சுற்றுச்சூழல் பாதிப்பு குறைய ஏதுவாகும். உற்பத்தியாளர்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு..!!  சில நாடுகளில் இதை அமல்படுத்த ஆரம்பித்து விட்டதாகவும் கேள்விப்படுகிறோம்  ! 

ஹோரை கணக்கிடுவது எப்படி..?

Image
 ஹோரை கணக்கிடுவது எப்படி..? 1. ஒவ்வொரு கிழமையிலும் அந்த கிழமை பெயரில் உள்ள ஹோரையில் நாள் துவங்கும். அதாவது சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரம் அந்த ஹோரை இருக்கும்.  அதாவது  திங்கட்கிழமை காலை 6  மணி முதல் 7 மணி வரை சந்திர ஹோரை.  அதன் பின்னர் திங்கள் முதல் பின்புறமாக ஒரு கிழமை விட்டு ஒரு கிழமை பெயர் உள்ள ஹோரை அடுத்தடுத்து வரும்.  திங்கள் 6 -7   சந்திரஹோரை                 7 - 8   சனி   ,,                 8 - 9   வியாழன் ( குரு) ,,               9 - 10  செவ்வாய்  ,,              11 - 12  ஞாயிறு ( சூரிய),,              12 - 13 வெள்ளி ( சுக்கிர),,  இந்த சுழற்சியில் மறுநாள் காலை 6 மணி வரை ஹோரை அமையும்.  செவ்வாய் கிழமை 6 - 7  ... செவ்வாய் ஹோரை 7-8 ....  சூரிய  ,,  8-9 ..... சுக்கிர  ,,...

எமகண்டம் .

 எமகண்டம் பார்ப்பது எப்படி? வார நாட்களை 'வியாழன் ' முதல் பின்புற வரிசையில் 'வெள்ளி' வரை நினைவில் கொள்ளுங்கள்.  கிழமை            எமகண்டம் நேரம் வியாழன்           6.00  -  7.30 புதன்                   7.30  -  9.00 செவ்வாய்          9.00  - 10.30 திங்கள்               10.30 - 12.00 ஞாயிறு              12.00 - 13.30 சனி                      13.30 - 15.00 வெள்ளி              15.00 - 16.30

ராகுகாலம்.

 ராகு காலம் கணக்கிடுவது எப்படி...?  1. ஒரு வாய்ப்பாடு மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.  2. " திரு நாள் சந்தடியில்        வெய்யிலில்  புறப்பட்டு விளையாட  செல்வது ஞாயமா " 3. இந்த வாய்ப்பாடில் ஏழு வார்த்தைகள் உள்ளது. ஒவ்வொரு வார்த்தைகளின் முதல் எழுத்தும் அந்த எழுத்தில் தொடங்கும் கிழமையை குறிக்கும்.  4. திரு நாள்..... தி... திங்கள் கிழமை சந்தடியில்... ச... சனிக்கிழமை    வெய்யிலில்.. வெ.. வெள்ளி  ,,  புறப்பட்டு..... பு.. புதன்கிழமை விளையாட.. வி.. வியாழக்கிழமை செல்வது ... செ.. செவ்வாய்  ,,  ஞாயமா.... ஞா.. ஞாயிறு  ,,  5. வார்த்தைகள் அமைக்கப்பட்டுள்ள அதே வரிசையில், வார நாட்கள் கிழமைகளில் ராகு காலம் 1 1/2 மணி நேரம் அமைகிறது.  அதாவது...  திங்கள் - காலை 7.30 - 9.00 வரை சனி        -      ,,        9.00 - 10.30 வரை வெள்ளி -     ,,       10.30 - 12.00   ,,  புதன்      -    ...

Deepavali celebration - kukuFM

 Listen to   show *Celebration of Deepavali* only on Kuku FM. Download app now! https://kukufm.page.link/vmBdfvSHU1hd7y3o8

Kuku Fm...!

 Listen to   show *Tamil Koorum Arivum Ariviyalum* only on Kuku FM. Download app now! https://kukufm.page.link/vmBdfvSHU1hd7y3o8

Property... Virtual !?

 "Today when you say property, it means offline. You think of houses and land but in future when you say property, people will just be like - in which virtual world or virtual environment? So everything is going virtual, ownership is going virtual and that's where metaverse comes into the picture." says Nischal Shetty, CEO - WazirX.

ஆரோக்கியமான அதிர்வுகள் !

 🍯தமிழ் மருத்துவம்🍯 ஜப்பானியர்களின் ஆச்சரியமான ஆராய்ச்சி ...  1. *அமிலத்தன்மை* உணவினால் மட்டும் உருவாவதில்லை , *மாறாக மன அழுத்தம்* காரணமாக உடலில் அதிக அமிலத்தண்மைஆதிக்கம் உருவாகிறது.  2. *உயர் இரத்த அழுத்தம்* உப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்ல, முக்கியமாக *எதிர் மறை உணர்ச்சிகளை மனம் அதிகம் சிந்திப்பதால்* .  3. *கொழுப்பு* கொழுப்பு நிறைந்த உணவுகளால் மட்டுமல்ல, *அதிகப்படியான சோம்பல்* அல்லது உட்கார்ந்த வாழ்க்கை முறையும் அதிக காரணம்.  4. *ஆஸ்துமா* நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் இடையூறு ஏற்படுவதால் மட்டுமல்லாமல், பெரும்பாலும் *சோகமான உணர்வுகள்* நுரையீரலை நிலையற்றதாக ஆக்குகின்றன.  5. *நீரிழிவு நோய்* குளுக்கோஸை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்ல, *பிடிவாதமான அணுகுமுறை* கணையத்தின் செயல்பாட்டை சீர்குலைக்கிறது.  6. *சிறுநீரக கற்கள் : கால்சியம் ஆக்ஸலேட் வைப்பு மட்டும் இல்லை, ஆனால்  உணர்ச்சிகளையும் வெறுப்பையும்* மனதின் ஆழத்தில் வைத்திருப்பதாலும் ஏற்படுகிறது.  7. *ஸ்பான்டைலிடிஸ் *: எல் 4 எல் 5 அல்லது கர்ப்பப்பை கோளாறு மட்டுமல்ல;  ...

வேண்டும் வரமறிந்து தந்தருளே!

 முன்னைக்கும் முன்னை பரம் பொருளே..., நானோ உன் பின்னடி பற்றி வரும் பொருளே! நா.. னோ... உன் அடி... பற்றியே.... வரும் பொருளே...!  எனக்கு வரங்கள் தந்தருளே...! வேண்டிய வரங்கள் தந்தருளே!  என் மனம் வேண்டும் வரமறிந்து தந்தருளே!  போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு... மெய்யாகும் வரம் தந்தருள்வாய் இறைவா! இறைவா...!  என் மனத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்து அருள்வாய் ! அம்மையே ; அபிராமி அன்னையே!

குப்பை விடுக்கும் எச்சரிக்கை !

 குப்பை விடுக்கும் எச்சரிக்கை  !             ------ உதவாது என்று வீசி எறியப்பட்ட நானும் உன்னை துரத்தியடிப்பேன்...  துர்நாற்ற வாயுவாய்  உன் மூக்கினுள் நுழைந்து  !  ஆகவே மானிடர்களே உதவாது என்று எதையும் மூலையில் எறிந்து குவித்து வைக்காதீர்  குப்பையாய் ...  வயதானோர் உட்பட  ; ஆம்   *வயதானோர் உட்பட!* தகுந்த மேலாண்மை செய்வதை விடுத்து  !! 

பிடித்த பாடல் வரிகள்...!

 பல்லவி (ராகம்: சிவரஞ்சனி) குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா ------------------ அனுபல்லவி (ராகம்: சிவரஞ்சனி ) கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக் குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா சரணம்1 (ராகம் சிவரஞ்சனி) -------------------------------------------- வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணாமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ------------------------------------------------- சரணம்2 (ராகம்: காபி) திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவி...

திருமதி செல்வம் 701

 திருமதி செல்வம் 701 துப்பி விட்டாள்  வார்த்தைகளை, மகளின் முடிவை தூண்டும் விதமாய்-தாய் துப்பி விட்டாள் வார்த்தைகளை!  அந்தத் தாய் அறிந்த தெல்லாம் கனல் கக்கும் சுடு சொற்களும், சபிக்கும்  வார்த்தைகளும் மட்டுமே !  தீர்வுகள் என்றுமே அதில் இருந்ததில்லை!  காரணங்களை என்றுமே தன்னிடம் கண்டறிய முயன்ற தில்லை... முடியவுமில்லை  . இளைத்தவர் மீதே குற்றம் சுமத்தும் பழக்கம் மிகுந்திருந்த காரணத்தால்...!  உற்ற உறவையும் விட மேலாக துடித்தது நட்புக்களே...  மீண்டும் துளிர்த்து நட்பூக்களே  !!! 

வாழ்த்து செய்தி...!

  தாயையும்,  தந்தையையும் விஞ்சி,  உச்சம் பல தொட்டு,  வெற்றிவாகை சூட  தகுதி வாய்ந்த மகவை  வயிற்றில் சுமந்து - இன்று  வளைகாப்பு கொண்டாடும்  சௌ.ப்ரீத்தா,  வைபவம் இனிதே நடைபெற்று,  மகவை சுகமாய் ஈன்றெடுத்து,  வாழ்வாங்கு வாழ,  வாழ்த்துகிறேன்!  வாழ்க வளமுடன்  !  *சௌ.ராஜன்* ( ப்ரீத்தாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தி.. . வரிகள் பிடித்ததால் இங்கு பதிவு  !  ) 

உடைந்த உறவுகள்...!

 பொக்கிஷமா...  கடவுள் தந்த உறவெல்லாம்...  தந்தை, தாய் முதற்கொண்டு,  தாரம், பிள்ளைகள் வரை  அருமை அறியாம,  பாசங்காட்ட தெரியாம..  பாசமும் புரியாம  பேர்பாதி உறவுக தொலைஞ்சி போச்சுதண்ணே,  மீதி கை தவறி உடைஞ்சி போச்சுதண்ணே  !  எப்படி சரி செய்வேனோ,  யார் உதவிய பெறுவேனோ !  கலங்கித்தான் போயிருக்கேன்,  கடந்து போக பாதையில்ல ! 

முதுமையில் தவம்...!

 அதிக பட்ச காத்திருப்புக்கு பின் கையில் வந்து விழும் உணவு!  பொறுமை பயில பயிற்சி களம்  !  பசியை பொறுப்பது ஒரு தவம்.  முதுமையில் கட்டாயம் பயில வேண்டிய தவம்!  இல்லாதவன்          பொறுமை காப்பது வேறு வழியின்றி...  எல்லாம் இருப்பவன் பொறுப்பதுவே, தவம்!

காலநிலை மாற்றம்- மக்கள் இயக்கம் ஆக...!

  Climate changes to extreme levels in nearby futures :- https://youtu.be/p3nuuG2ySMw இதற்கான மக்கள் மனநிலையை ஒரு இயக்கமாக ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும். * தினமும், அல்லது வாரத்தில் ஒரு நாளாவது காலை, மாலை சந்தியா நேரங்களில் ஒரு 15 நிமிடம் கால நிலை மாற்றம் குறித்த நம் கேள்விகளை, அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை வாசகமாக எழுதிய பதாகைகள் கையிலேந்தி வீட்டின் வாசலில் குடும்பம் அமைதியாக நிற்க / உட்கார வேண்டும். * அக்கம் பக்கம் வீட்டாருடன் இது குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம். * மாதம் ஒரு முறை அந்தந்த பகுதிகளில் அரசியல் பிரமுகர்கள் கொண்டு கூட்டம் நடத்தி விவாதிக்கலாம். * இந்த அமைதியான தொடக்கம், மக்களின் ஒத்த எண்ணங்களின் குவியல், மாற்றங்களை கொண்டு வரும். * அரசியல் வாதிகளை ஈடுபடுத்துவது, அவர்களை பேச வைப்பது, இது குறித்த சிந்தனை  அவர்கள் மனதில் வளர காரணமாகும். அவர்களின் குடும்பத்தாரும் இதுகுறித்து வீட்டில் அவருடன் விவாதிக்க, விஷயம் வீரியம் பெறும். * பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி, Quiz Contest, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி  பரிசுகள் தரலாம். இதன் க...

Comparison...!

  At work, we tend to compare and compete with others, instead, compare and compete with ourown selves.  'Being the richest man in the cemetery doesn't matter to me. Going to bed at night saying we have done something wonderful... that's what matters to me. '                     -- Steve Jobs

சாதாரண / பிரமாதங்கள்...!

சாதாரண விஷயங்கள் பிரமாதப்படுத்தப்படுவதும், பிரமாத விஷயங்கள் சாதாரண படுத்தப்பட்டு கொச்சையாக்கப் படுவதும், வதந்திகள் புரியும் மாயாஜாலங்கள். இப்படிப்பட்ட மாயாஜாலங்களை நம்பியே இன்று அரசியல் கட்சிகள் பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கிறது.  இந்த வதந்தி என்கிற மாயாஜாலங்கள் மக்களை குழப்புவதில் பெரும் வெற்றியை ஆரம்பத்தில் காண்பது போல் தெரிந்தாலும், அதையும் மீறி மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். அது தேர்தலின் போது தெரிந்து விடுகிறது.  இது சாதாரண நரி தன்மேல் நீலநிற சாயம் பூசப்பட்டு நீல நிற 'வினோத மிருகமாக' காட்டில் அனைத்து மிருகங்களையும் ஆட்டி படைத்தது போல உள்ளது. ஒரு பெரும் மழையில் சாயம் வெளுத்து தான் சாதாரண நரி என்பது தெரிந்துகொண்ட அனைத்து மிருகங்களாலும் துரத்தப்பட்டு துன்பப்ட்ட கதையாக கட்சிகள் பல்லிளிப்பதும் மக்கள் கண்டு களிக்கும் காட்சிகளே  ! 

சகல வியாதி நிவாரணம்...!

 சகலவிதமான வியாதி நிவாரணம் பெற கூட்டு பிராத்தனையாக பரமாச்சார்யாரின் இந்த ஸ்லோகத்தை சொல்லவும் :- "பாலாம்பிகேச வைத்யேச பவரோக  ஹரேதி ச ஜபேந்  நாமத்ரயம்  நித்யம் மஹாரோக நிவாரணம். "

நம் கைகள்.. கால்கள் !

  நம் கைகள்.. கால்கள்  !  மனித உறுப்புகளில் கைகள், கால்கள் ஒரு ஒற்றுமை ;  இரண்டும் இரண்டிரண்டு உண்டு!  ஒரே நீளம், அளவு, ஒத்த அசைவுகள் .  இவை ஒற்றுமை !  கைகள் இரண்டும் சேர்கிறபோது, ஒரு ஆக்கம் விளைகிறது.  அணைத்து பிடித்தல், அரவணைப்பு உறவு வளரும்!  கால்கள் இரண்டும் சேர்ந்து நிற்கும் நிலையில் ஒரே இடத்தில் நிற்க மட்டுமே முடியும்!  ஒன்றை ஒன்று விலகி அசையும் போது நடக்க, கடக்க, ஓட முடிகிறது! தூரம் சென்று உறவுகளை வளர்க்க முடியும்!  ஒன்று இணைந்தால் வளரும், அது கைகள்.  ஒன்று விலகினால் வளரும்... அது கால்கள்  ! 

பகிர்தல் - சம்பாதித்தல்...!

 அந்த காலத்து பாட்டி  சொன்னது :- பத்து குழந்தைகள் பெத்தாலும், பாலைத் தான் ஒரு தாய் பகிர்ந்து அளிக்க முடியும்...!  பாக்கியத்தை அவனவன் தான் சம்பாதிக்க வேணும்! அதுக்கு ஆண்டவன் அருள வேணும்  !!                     -------

உணர்ச்சி பிழம்புகள்...!

 உணர்ச்சி பிழம்புகள்...!                -------- உச்சந்தலை முதல்  உள்ளங்கால் வரை உடல் ஒவ்வொரு அங்குலமும்...  உணர்ச்சியின் பிழம்புகள்,  தொட்டால் அதிரும்,  பிடித்து விட்டால் முனகும்.  கடித்தால் கதறும் ; மயிலிறகு கொண்டு வருட...  கூசும்... நெளியும்... - ஆனால்  இன்பம் பெறவும்... தரவும்,  வலி நிவாரணம் பெறவும்... தரவும்,  இதில் ஏதாவது ஒன்று எப்போதும் தேவைப்படுகிறது ,  மருத்துவர்,  மாற்றுப் பாலர்,  எதிரிகள்,  எவரிடமிருந்தாவது !  -*சௌ.ராசா*-

மகிழ்வித்து மகிழ். ...!

. ஒரு விஷயம் நம்மை மிகவும் சந்தோஷப் படுத்தும் போது, அந்த சந்தோஷத்தை நம் முகத்தில் நாம் பார்க்க ஒரு கண்ணாடி வேண்டும்.  கண்ணாடி இல்லாத இடத்தில்  ( உலகத்தில் ) அந்த சந்தோஷ முகத்தைப் பார்க்க அதே சந்தோஷத்தை அடுத்தவருக்கு ஏற்படுத்தி தந்து, அவர் சந்தோஷப்படுவதைப் பார்க்கலாம். அப்போது நம் சந்தோஷத்தை நம் முகத்தில் பார்த்த சந்தோஷம் கிடைக்கும்.  "மகிழ்வித்து மகிழ்வோம்"

பணம் ஈட்டலும்... வயோதிகமும்..!!!

 https://photos.app.goo.gl/ZWmmURqjZoMT1wwy9

லட்சியம் - விவேகானந்தரின் வேதாந்த சொற்பொழிவு

 https://youtu.be/z-YNcDe8JZo

நடப்பவைகள்...!

 வீடாகட்டும், நாடாகட்டும்  ..  நடக்கும் அத்தனை துர் செயல்களையும், வரி விதிப்பு/ஏய்ப்பு, கடன் நிவாரணம், தள்ளுபடி, எளியோர் நலன் தள்ளி, வலியோருடன் கூட்டு ; சிந்தனை, செயல்களில் அழுக்கு எதுவானாலும் சரி இவைகளே இன்றைய நடைமுறைகள் நம் வாழ்வில் ... கண்ணில் படும் காட்சிகளை கண்டுகளிப்போம்... தட்டில் இட்ட உணவை உண்டு களிப்போம்!  நடப்பவை கள் ...  Let it go multifold.. At a very faster Rate... Very expeditiously... Only then people would wake up and show their protest and give their Blowing Heavily... Like hitting the mosquito that bite  them for their blood feast.  Pray for soonest possible... To experience it in our own living period... So that Nation can be handed over to next generation in a very safe manner for them to preserve and enjoy it for another 100 years and beyond like Japan revived after nuclear Bombing...!  Hope iam clear in my intention. 🤣 ( இடுக்கண் வருங்கால் நகுக

எளிய உணவு... வாழும் வழி..!

 எளிய உணவு - வாழும் வழி  !                   _____ ஒரு டம்ளர் அரிசியை கழுவி அடுப்பில் ஏற்றினால் சோறு. ..  அதில் தண்ணீர் சேர்த்து பானையில் இட்டு வைத்தால் நாள் முழுதும் உணவு.  சோறும், நீரும் சிறிது பாத்திரத்தில் இட்டு, தயிர் சேர்த்து உடன்  சட்னி, அல்லது ஊறுகாய் எதாவது சேர்த்து பிசைந்து சாப்பிட தொட்டுக்கொள்ள தனியே ஏதும் தேவையில்லை. தேவை எனில், வெங்காயம் சேர்த்து சாப்பிட ருசியோ கொள்ளை. பசியோ போன இடம் தெரியவில்லை. எளிய சத்தான உணவு. இதை தயாரிக்க நேரம் 5 முதல் 30 நிமிடம் எவ்வளவு என்பது அவரவர் கையில்.  வசதிகள் இருக்கும் போதே இதை பழகினால் எதுவும் இல்லாத சூழலில் வாழ்க்கை வாழ மிக எளிதாகும்.  வாழ நினைத்தால் வாழலாம். .  வழியா இல்லை பூமியில்

அம்மா...!

 அம்மா.. அம்மா.. அம்மா,  அது சும்மா.. சும்மா.. சும்மா..  தொட்டுத் தரும் சுகமே, தொடாமலும் வருடும் மனமே  !                           ( அம்மா...)  சிலருக்கு தொல்லை களின் களமே ...  தலைவலியே  தினமே  !                            ( அம்மா..)  அவள் அசைந்தாலே நடனம்,  வாய் திறந்தாலே கான மழை...!  தொடாமல் வருடும் மனதை...  அவளே ரித்து வின் சொர்க்கம்  !!!  *சௌ.ராசா* ( ரித்து.. என் பேத்தி) 

Proposal sent to Rlys...!

  Kind attention is invited to news line published in Dinamalar dt. 18th February, 2022, Madurai edition. (Copy enclosed in Attachment ). In supplements to this, it is felt, for Rly to operate trains in any New route, to offset the anticipated loss in revenue, a viable Honey Bee project with a Good ROI is given below; Rly Authority may explore the feasibility and implement it, thus may serve the nation. Proposal :- 5 மீ க்கு 1 பெட்டி 1 கிமீ க்கு 200 பெட்டி இடைப்பட்ட வெளிகளில் பலவிதமான பூ செடிகள், தென்னை, பனை வளர்ப்பு. ரயில் பாதையின் இரு புறமும் 10 அடி ( 3 மீ) பூச்செடி/ தேனீ வளர்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கலாம். 1கி மீ தூரம் ஒருவருக்கு என்று ஒப்பந்ததாரர் / பணியாளர் நியமிக்கப்படலாம். வருமான உத்தேச அளவு:- தேனீ வளர்ப்புப் பெட்டிகள் 10 எண்ணம் X 2000 வீதம் =  20,000 1 ஆண்டு பராமரிப்புச் செலவு =  2000 முதலீட்டுச் செலவு = 22,000 வருமானம் தேன் 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 20 கிலோ வீதம் 10 பெட்டிக்கு மொத்தம் 200 கிலோ கிடைக்கும். விற்பனை 200 கிலோ X 100 ரூபாய் =  20,000 ...

உணவு... தொப்பை... குப்பை...!

 காசு போட்டு வாங்கும் உணவெல்லாம் சேருமிடம் குப்பையே... அவை இடைப்பட்ட நாட்களில் தங்குமிடம் நம் தொப்பையே...! 

Alkalinity / Acidity...!

      Alkalinity and Acidity  !  Alkalinity and Acidity are like Sreedevi (symbol of wealth) and Moodevi (symbol of Evil power), in our puraanas.  Where Sreedevi stays, there Moodevi won't enter. But would always wait at just outside of backdoor. The moment Sreedevi leaves, Moodevi enters through backdoor and rule the house.  Alkalinity/Acidity are also the same.  Human blood by nature is Alkaline base. Our food habits gradually increases Acidity in our blood  and Alkalinity goes off.  If you see the scale of Alkalinity/ Acidity, that shows a reading from 0 to 10, where the reading from 0 to 5 it is Acidity and from 5 to 10 it is Alkalinity.  As you add Acidity in blood, blood looses Alkalinity...!  As you add Alkalinity in your blood, blood looses Acidity..!  Alkalinity promotes health.  Acidity promotes Illness.  What we want, is our own choices.  தீதும் நன்றும் பிறர் தர வாரா...! 

கற்க... பயில...!!!

  கை படும் துட்டு எல்லாம் செலவழிக்க அல்ல, (செலவை தவிற்க, கற்க வேண்டும்)  தட்டில் விழுவதெல்லாம் உண்பதற்கல்ல, ( உடலை கேட்டு, தகுந்ததை, அளவாய் உண்ணவேண்டும்; )  விரவியுள்ள  காற்றெல்லாம் சுவாசிக்க அல்ல... ( மூச்சை அடக்கவும் பயில வேண்டும்) 

பட விமர்சனம்.

  அம்முவாகிய நான்.. .!  தொடுதல், வருடுதல் என்பது...  விரல்கள் விலகிய பின்னும்  தொடுதல் தொடர்வதாக உணருதல் மட்டுமே !  மற்றெல்லாம்g  வேறு வேறு ... வன்மையை உணர்த்தும்!! இவளின் மனக் காயங்களுக்கு இசையை மருந்தாக காதுக்குள் புகட்டும் இவன் யாரோ... கடவுளோ...கணவனோ.. ?  இன்னும் நிறைய நல்ல புள்ளிகள் தொட்டுக் காட்ட நிறைய உண்டு இப்படத்தில். 

திடீர் அறிவிப்புகள் - பூகம்பங்கள்...???

 இந்தியாவில் பூகம்பம் கடந்த சில வருடங்களாகவே ; அளவில்...  முழுவதுமாக அழித்து விட வில்லை... ஆனால் அமைதியாக மக்கள் வாழ ஏதுவாகவும் இல்லை. மக்கள் வீட்டினுள் இருந்ததை விடவும் வீதியில் நின்ற நேரம் அதிகம் !  எந்நேரமும் அளவு விஞ்சி விடும் என்ற நிலையில்... அதை நிறுத்த மாறுதலை, மக்களுக்கு ஆறுதலை கொண்டு வர எதிர்வினை புரியும் அரசியல் விஞ்ஞானிகள், தென்னகத்தே, குறிப்பாக தமிழகத்தே அநேகர் உண்டு... அதில் முதலாமவர் நம் முதல்வரே.  பூகம்பத்தின் தொடர் அதிர்வுகளால் திகைத்த அனைத்து மாநில மக்களுக்கும் தன் கருத்தான எதிர் அதிர்வுகளை பரவலாக்கி இடும்பைக்கு இடும்பை தந்து கொண்டிருப்பவர் நம் முதல்வரே!  பூகம்பம் தன் அதிர்வுகளை கூட்டவும் முடியாமல் நிறுத்தவும் இயலாது திணறிக் கொண்டிருப்பது இவ்வெதிர் அதிர்வுகளால் மட்டுமே என்பது சர்வ நிச்சயம்.  *சௌ.ராசா

மனநிறைவு...!

  நான் வெற்றிகரமானவனா ...?  என்னையே நான் திரும்பத்திரும்ப கேட்டுக் கொள்ளும் கேள்வி.  ஆனாலும் எனக்கு திரும்பத் திரும்ப "என் மன உள் இருந்து ", கிடைக்கும் பதில், நான்  " மன நிறை வானவன் " என்பதே!  மனநிறைவை தந்த நிகழ்வுகள் என் வாழ்வில் ஏராளம் உண்டு. அதில் எதுவும் 'வெற்றி' க்கு சான்றாக எவராலும் கொள்ளப்படவில்லை என்பது நிதர்சனம்  !  நிகழ்வுகள்... :- 1. எனது 10 வயது என்று நினைவு, பாட்டி சொன்னபடி, மளிகை கடையில் லிஸ்ட் படி சாமான்கள் வாங்கிய பின் காசை கொடுத்து விட்டதாக நினைத்து, (கடையில் கூட்டம் அதிகம்) மீதி காசை கேட்டு,கடைக்காரர் நான் காசை தரவில்லை என்று கூறி, வீட்டில் பெரியவர் யாரையாவது அழைத்து வரச்சொல்ல, பாட்டி யை அழைத்து சென்று, பாட்டி கடைக்காரர் வசை மாரி பொழிந்தது, ஆளை விட்டால் போதும் என்று பின் மீதி காசை கணக்கிட்டு,  கடைக்காரர் தந்தது... வீட்டிற்கு வந்த பின் எனது அரைக்கால் சட்டை பாக்கெட்டில் கை துழாவ , அதுவரை அகப்படாத காசுகள், அப்போது கையில் அகப்பட, பாட்டியிடம் தயங்கித் தயங்கி அழுது கொண்டே என் மீதுதான் தவறு என்று உண்மையை ஒப்புக்கொண்டு, நானே காசை கட...